Categories
உலக செய்திகள்

20 ஆண்டுகளுக்கு பிறகு… தாயகம் திரும்பிய ராணுவ ஜெனெரல்…. வரவேற்ற தலைவர்கள்…!!

ஆப்கானிஸ்தானில் சுமார் 20 வருடங்களாக தங்கியிருந்த அமெரிக்க படையினர் தங்களின் நாட்டிற்கே திரும்புவதை தொடர்ச்சியாக அமெரிக்க இராணுவ ஜெனரல் முதலாவதாக தாயகம் திரும்பியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக அமெரிக்க படையினர் தங்கியுள்ளதை அடுத்து வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைவரும் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்க படைகளை முன்னின்று நடத்திய அமெரிக்க ராணுவ ஜெனரல் ஆஸ்டின் எஸ் மில்லர் முதலாவதாக தாயகம் திரும்பியுள்ளார். இவரை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும்  முப்படைகளின் தலைவர் மார்க் மில்லி ஆகியோர் மேரிலாந்து விமானப்படை தளத்தில் வரவேற்றுள்ளனர்.

அதிலும் முக்கியமாக 2001 இல் அல் கொய்தா இயக்கம் நியூயார்க்கில் நடத்திய இரட்டை கோபுர தாக்குதல் காரணமாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை அடக்குவதற்காக அமெரிக்க படையினர் அங்கு சென்றனர்.மேலும் கடந்த 20 ஆண்டுகளில் தாலிபான்களுடன் நடந்த மோதலில் சுமார் 2400 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்காணோர் காயமடைந்தும் பல கோடி ரூபாய்கள் அமெரிக்கா செலவிட நேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அமெரிக்க படையினர் திரும்புவதை  தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர்.

Categories

Tech |