இளைஞர் ஒருவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி எரிச்சலடைந்து ஆற்றுக்குள் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் லூசியானா பகுதி சாலை ஒன்றில் இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அங்கு சில மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சிறிதும் வாகனங்கள் நகர முடியாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கொண்ட ஜிம்மி இவன் ஜென்னிங்ஸ் (26) என்ற இளைஞர் தனது பொறுமையை இழந்து காரில் இருந்து இறங்கி முதலைகள் அதிகம் இருக்கும் ஆற்றுக்குள் குதித்தார். பின்னர் சுமார் 3 மணி நேரம் கழித்து அருகில் இருந்த தீவு ஒன்றில் கரையேறினார்.
இதுகுறித்து ஜென்னிங்ஸ் கூறுகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வெகு நேரமானதால் என்னால் பொறுமை காக்க இயலவில்லை. எனவே ஆற்றில் குதித்தேன். ஆனால் பாலத்திலிருந்து நதி 100 அடி உயரம் என்பதால் இடது கையில் காயம் ஏற்பட்டது. அதனால் என்னால் நீந்த இயலாததால் ஆறு உள்வாங்க தொடங்கியது. அதன் பின் வலது கையை பயன்படுத்தி கரையை அடைந்தேன். மேலும் முதலைகள் இருப்பதும் எனக்குத் தெரியாது என்று கூறினார்.