கும்பம் ராசி அன்பர்களே.! அனைவரிடமும் நியாயமாக நடந்து கொள்வீர்கள்.
இன்று முன்னேற்றம் காண்பதற்கும் முயற்சி எடுக்கும் நாளாக இருக்கும். சந்திராஷ்டமம் பிரச்சனைகள் தீர்ந்து மனதில் நிம்மதி இருக்கும். மன குழப்பங்கள் சரியாகும். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். திடீர் கோபங்கள் உண்டாகலாம். அதனை கட்டுப்படுத்த வேண்டும். புத்தி சாதுரியம் வெளிப்படும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும். ஒரு பிரச்சினை வந்துவிட்டால் அதனை உங்களால் சிறப்பாக கையாள முடியும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனடியாக முடிவு காண வேண்டும். தெளிவான சிந்தனை தூண்டும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். அனைவரிடமும் நியாயமாக நடந்து கொள்வீர்கள்.
குடும்ப தேவைகள் பூர்த்தியடையும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு உடல் சோர்வை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம். கையில் காசு புரளும். மாணவர்களுக்கு தன்னிச்சையான முடிவு எடுக்க முடியும். மாணவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று காதல் சிரமத்தை கொடுக்காது. சந்தோஷத்தைக் கொடுக்கும். சிரமத்தில் இருந்த காதல் கூட இப்பொழுது சரியாகி சரியாகிவிடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கரு நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: கரு நீலம் மற்றும் மஞ்சள்