Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! அவசரம் வேண்டாம்….! கவனம் தேவை….!!

மீனம் ராசி அன்பர்களே.! காரியத்தில் நிதானம் வேண்டும்.

இன்றைய நாளை நீங்கள் ரொம்ப சிறப்பான முறையில் வழிநடத்திச் செல்ல வேண்டும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் தொடங்க இருப்பதால் சில காரியங்களை பொறுப்பாக செய்ய வேண்டும். அவசரமும் அலட்சியமும் இருக்க வேண்டாம். காரியத்தில் நிதானம் வேண்டும். பணம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடிக்க இயலாது.  மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய ஒப்பந்தங்களை படித்து பார்த்து கையெழுத்து போடவேண்டும். அந்நிய தேச அனுகூலம் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது பொறுமை தேவை. வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பணத்தை நான் பெற்று தருகிறேன் என்று எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டாம். குடும்பத்தாரிடம் கோபங்கள் காட்ட வேண்டாம்.

பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு விடுவீர்கள். இனம் புரியாத மன குழப்பம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சில நேரங்களில் கோபம் அதிகரிக்கும். அதனை நீங்கள் தான் சரி செய்து கொள்ள வேண்டும். விருந்தினர் வருகை இருக்கும். மாணவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். படிப்பில் மந்தநிலை இருக்கும். கல்விக்காக நேரத்தை ஒதுக்கி அதில் கவனம் செலுத்த வேண்டும். காதல் சிக்கலை ஏற்படுத்தும். சிக்கலை ஏற்படுத்தினாலும் மாலை நேரம் வரை பொறுத்திருந்தால் எல்லாம் சரியாகிவிடும். பொறுமை தேவை. அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டு விட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு  நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் மாற்றத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 5                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறம்

Categories

Tech |