காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய 15 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் சந்துரு-வாணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் குடும்பத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் அழகர்சாமி என்பவரின் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து முன்விரோதம் காரணமாக அழகர்சாமியின் மகன்களான அஜித், பிரபு மற்றும் அவர்களின் உறவினர்கள் கூட்டமாக சென்று வாணியின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இது குறித்து வாணி இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித், பிரபு உள்ளிட்ட 15 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.