வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆணை குட்டை பகுதியில் மீனாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுந்தரமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் மீனாட்சி இவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனையடுத்து மீனாட்சி தனது மகளுடன் கோவை சென்றிருந்தபோது சுந்தர மூர்த்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுந்தர மூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தர மூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.