தேசிய நோய் கட்டுப்பாடு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வருகிற திங்கட்கிழமையிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது. அதாவது இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அபுதாபியில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தேசிய நோய் கட்டுப்பாட்டின் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதி என்று அந்நாட்டின் பேரிடர் குழு அறிவித்துள்ளது.
இதற்கிடையே துபாய் நாட்டில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவது தொடர்புடைய நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் தினந்தோறும் அந்நாட்டில் சுமார் 1,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.