Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜூலை 19ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைனில் தேர்வு நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வினாத்தாள்களை இமெயிலில் அனுபவம், விடைத்தாள்களை மாணவர்கள் ஸ்கேன் செய்து அனுப்பவும் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது .ஆன்லைன் தேர்வு முறை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு பொருந்தாது எனவும் புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஆன்லைனில் மாணவர்கள் தேர்வு எழுத தற்போது தயாராகி வருகின்றன. ஆன்லைன் தேர்வு நடத்துவதற்கு முன்பாக, மாதிரி தேர்வு நடத்தப்படும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |