பெண்ணிடம் தங்க நகையை பறிக்க முயன்ற மர்மநபர்கள் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கமலம் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் ஆத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் கமலம் அணிந்திருந்த தங்க நகைகளை பறிக்க முயன்றுள்ளனர்.
இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட கமலம் தங்க நகையை கையால் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். அதன்பின் மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர். இதுபற்றி கமலம் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.