மனைவியின் கழுத்தை சேலையால் நெறித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி நகரில் இரும்பு வியாபாரியான செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பூமாதேவி அடிக்கடி செல்போனில் பேசியதால் செல்லையாவிற்கு அவரின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உமாதேவி செல்போனில் தனது தோழியுடன் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த செல்லையா சேலையால் உமாதேவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.