Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கொழுந்துவிட்டு எரிந்த தீ…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள கள்ளிகுப்பம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் சண்முகத்தின் கடையில் இருந்து புகை வந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடையில் பற்றி எரிந்த தீயை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்து விட்டனர்.

மேலும் மின் கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |