Categories
சினிமா தமிழ் சினிமா

‘உறியடி’ விஜய் குமாரின் புதிய படம்… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

விஜய் குமார் அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘உறியடி’ படத்தை விஜய் குமார் எழுதி, இயக்கி, நடித்திருந்தார் . இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு உறியடி 2 திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் விஜய் குமார் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரீல் குட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்குகிறார்.

விஜய் குமார்

இவர் உறியடி, உறியடி 2 படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தில் அர்ஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார் . மேலும் அபினாஷ் ,ஷங்கர் தாஸ், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு  கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது .

 

Categories

Tech |