தென்மேற்கு பருவமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.
வளிமண்டல சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர், தேனி, சேலம், நீலகிரி, தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கிண்டி, டி நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கேகே நகர், ராமபுரம், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதை போன்று வளசரவாக்கம், ஆவடி, திருமுல்லைவாயலில், பட்டாபிராம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நாளை சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.