Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சட்டவிரோதமாக செய்த செயல்” வசமா சிக்கிய 2 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கருவாட்டுபேட்டை பகுதியில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு உள்ள மதுபான கடையின் அருகில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மங்களம் கம்மா பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் சாட்சியாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஐயப்பன் காலனியை சேர்ந்த அஜித் குமார் என்பவர் விற்பனைக்காக கஞ்சாவுடன் நின்றிருபது தெரியவந்தது. அதன்பின் அஜித்குமாரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் 350 ரூபாவை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |