Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு… 30 பேர் சாட்சியங்களாக சேர்ப்பு…!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சுகில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்று வழக்குகளில் 30 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை இரு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது வழக்கில் கைது செய்வதற்கு சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வருகின்றனர்.

இதற்காக ஒவ்வொரு போக்சோ வழக்கிலும் 10 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவர்கள் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Categories

Tech |