Categories
சினிமா தமிழ் சினிமா

‘களவாணி’ இயக்குனருடன் இணைந்த அதர்வா-ராஜ்கிரண்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

இயக்குனர் சற்குணம் அடுத்ததாக இயக்கும் படத்தில் அதர்வா, ராஜ்கிரன் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. இதைத்தொடர்ந்து இவர் பரதேசி, ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப்போகாதே உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அதர்வா அடுத்ததாக நடிக்கும் படத்தை சற்குணம் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . இயக்குனர் சற்குணம் களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பிரபல நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதில் இவர் நடிகர் அதர்வாவுக்கு தாத்தாவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

Categories

Tech |