Categories
தேனி மாவட்ட செய்திகள்

கேரளா செல்ல முயன்ற தொழிலாளர்கள்… அனுமதிக்காத போலீசார்… சாலை மாறியலால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா சென்ற தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்காததால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு தொழிலாளர்கள் கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் கேரளாவிற்கு குமுளி சோதனை சாவடி வழியாக ஜீப்பில் செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் தேனியில் இருந்து இடுக்கிக்கு செல்வதற்கு இ-பாஸ், தடுப்பூசி சான்று, கொரோனா பரிசோதனை சான்று போன்றவை இருந்தால் மட்டுமே காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குமுளி சோதனை சாவடியில் அனுமதி அளிக்கின்றனர்.

ஆனால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் எவ்வித கெடுபிடி இல்லாமலும் இ-பாஸ் இல்லாமலே தமிழகத்திற்குள் அனுமதி அளிக்கின்றனர். இதனையடுத்து நேற்று கம்பத்திலிருந்து கேரளாவிற்கு ஜீப்பில் சென்ற சரவணன்(35), வேல்முருகன்(33), குமார்(30) மற்றும் ஜீப் டிரைவர் பாலமுருகன் ஆகியோரை கேரளா சோதனை சாவடியில் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் ஆத்திரமடைந்த தொழிலாளிகள் தேனி கம்பம்மெட்டு சோதனை சாவடியில் கேரளா போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் தமிழக மக்களுக்கு மட்டும் கெடுபிடி காட்டும் காவல்துறையினர் கேரளாவிலிருந்து தமிழகம் வருபர்களுக்கும் அதே கெடுபிடியை காட்ட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளிகள் அங்கிருந்து கலந்து சென்றுள்ளனர். மேலும் சுமார் 1/2 மணி நேரம் நடத்த சாலை மறியலில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

Categories

Tech |