தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை முதல் பள்ளிகளில் நிர்வாக பணிகள் தொய்வின்றி நடக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை, புத்தக வினியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.