பருப்புக் கூட்டு
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு – 1 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 1
குடமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை ஊற வைத்து அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பூண்டு , வெங்காயம், பச்சை மிளகாய் , தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். இவை வெந்த பின் , வேக வைத்த பருப்பைச் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பருப்புக் கூட்டு தயார் !!!