Categories
தேசிய செய்திகள்

உபியில் கலக்கிய தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி… அப்படி அவர் என்ன செய்தார்…? வாங்க போகலாம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பணத்திற்காக கடத்தப்பட்ட பிரபல மருத்துவர் அடுத்த 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பெரும் பங்கு வகித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் பிரபல மருத்துவமனையில் மருத்துவராக உமாகாந்த் குப்தா பணியாற்றி வருகிறார். இவர் காதல் வலையில் சிக்க, பணம் பறிக்கும் கும்பல் இவரை கடத்தினர். இதையடுத்து மருத்துவரை விடுவிக்க வேண்டும் என்றால் 5 கோடி பணம் தர வேண்டும் என அந்த கும்பல் நிபந்தனை விதித்தது. அவரின் குடும்பத்தார் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க, மருத்துவரை மீட்கும் முயற்சியில் அவர்கள் இறங்கினர்.

ராஜஸ்தான் போலீசாருடன், உத்தரபிரதேச போலீசார் இணைந்து மருத்துவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போலீசாரின் முயற்சியால் மருத்துவர் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டார். இந்த முயற்சியில் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான முனிராஜ் பெரும் பங்கு வகித்தார். இதற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அவருக்கு 4 லட்சம் சன்மானம் வழங்கப்பட்டது.

Categories

Tech |