Categories
மாநில செய்திகள்

தட்டச்சு நிலையங்கள் 50% மாணவர்களுடன் செயல்படலாம்…. அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது தலைமை செயலாளர், பொதுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதையடுத்து திங்கள்கிழமை முதல் 31ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு நிலையங்கள் 50% மாணவர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |