தேனி மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து பட்ட பகலில் மர்மநபர்கள் தங்க சங்கிலியைபறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஸ்ரீராம் நகரில் பொன்னுத்தாயி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் முனியாண்டி இறந்துவிட்ட நிலையில் பொன்னுத்தாயி மகன் சடையாண்டியுடன் இருந்து வருகின்றார். இந்நிலையில் சடையாண்டி பெரியகுளம் சாலையில் மருத்துநடை நடத்திவரும் நிலையில் தினமும் பொன்னுத்தாயி அந்த மருந்துக்கடைக்கு செல்வது வழக்கம். அதே போல் நேற்று மதியம் வழக்கம் போல மருந்து கடைக்கு நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் பொன்னுத்தாயி அணிந்திருந்த 7 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதில் அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பொன்னுத்தாயி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தேனி காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகளை வைத்து தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.