சாலையை கடக்க முயற்சி செய்த பெண் ஒருவர் மீது தனியார் பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி பகுதியில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலை பகுதியில் அமைந்திருக்கும் பெற்றோல் நிலையத்தில் தொழிலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வேலையை முடித்துவிட்டு ரயில் மூலம் வீட்டுக்கு செல்வதற்காக மறைமலை நகர் பகுதியில் அமைந்திருக்கும் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து பத்மா மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த பத்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.