பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று பாலியல் புகார் அளித்த 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் தம்மை மிரட்டி ஓராண்டுக்கும் மேல் தன்னை கட்டுப்பாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சுவாமி சின்மயானந்தா மீது புகார் அளித்த மாணவி தனது புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் இன்னும் சுவாமி சின்மயானந்தாவை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் காவல்துறை அதிகாரிகள் வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நீதிமன்ற நீதிபதி முன்பு நான்கு மணி நேரம் தமது ரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்து அந்த மாணவி சுவாமி சின்மயானந்தாவை கைது செய்யும்படி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். போலியான நோயாளி போல நடித்து கைது நடவடிக்கையை சுவாமி சின்மயானந்தா மருத்துவமனையில் இருப்பதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். ஆனால் சின்மயானந்தா வழக்கறிஞர் சுவாமிக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், வயிற்றுப்போக்கால் அவதிப்படுவதாகவும் மருத்துவ ஆலோசனைப்படி ஓய்வு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.