Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கவனக்குறைவினால்… அப்படியே கவிழ்ந்துவிட்டது… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ கவிழ்ந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுந்தர்ராஜன் தன்னுடைய மனைவி லட்சுமியுடன் ஆட்டோவில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுங்கச்சாவடி அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது முன்புறத்தில் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் இவரது ஆட்டோ நிலைதடுமாறி லாரி மீது உரசி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் லஷ்மி படுகாயமடைந்துள்ளார். இவ்விபத்து குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை கைப்பற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் லட்சுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுனர் சம்பந்தன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |