மேற்கு வங்க மாநிலத்தில் வெடிபொருட்களுடன் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தின் பர்னகாஸ் மாவட்டத்தில் உள்ள ஷாசன் பகுதியில் போலீஸ் சிறப்பு படையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து சோதனை செய்ததில், 10 கிலோ எடை உள்ள வெடிபொருட்கள், 20 தோட்டாக்கள், 40 ஆயிரம் ரொக்கப் பணம் சிக்கியது.
இதையடுத்து மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்ததில் அவர் நாசவேலைகளில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் 3 பயங்கரவாதிகள் சிக்கினர். அவர்களுக்கு இன்று பிடிபட்ட அவர்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.