வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் வெளியான தீர்ப்பில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களை நீக்கக் கோரி நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு வாங்கிய சொகுசு கார்கான நுழைவு வரி தடைகோரி வழக்கில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எஸ் எம் சுப்பிரமணியம் வரி என்பது கட்டாயமாக வழங்கப்பட வேண்டியது. அது தனி மனிதனின் கடமை. நன்கொடை இல்லை என்று தீர்ப்பளித்து இருந்தார். தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாகவும் இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என்று விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து, அதனை இரண்டு வாரங்களுக்குள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்குமாறு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பானது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் மேல்முறையீடு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தீர்ப்பில் தண்ணீர் பற்றிய வசனங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீடு வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், மஞ்சுளா அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.