Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள நரசிங்கம்பட்டி பகுதியில் குமார் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது மோட்டார் சைக்கிளில் மேலூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக வந்த கார் இவரின் வாகனத்தின் மீது மோதி விட்டது.

இதனால் படுகாயமடைந்த குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |