அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணியில் இருந்த போது இவர் ஓட்டிச் சென்ற பேருந்தின் மீது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி மோதி விட்டது. இதனால் லாரி டிரைவருக்கு, ஜெயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த லாரி டிரைவர் ஜெயக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அங்கிருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்துள்ளார். இதுகுறித்து செல்லூர் காவல் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரான சுல்தான் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.