எள்மிளகாய்ப்பொடி
தேவையான பொருட்கள் :
எள் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 20
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 கப்
கடலைப்பருப்பு – 1 கப்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின் எள்ளை வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்றாக , உப்பு சேர்த்து நறநறப்பாக அரைத்தெடுத்தால் எள்மிளகாய்ப்பொடி தயார் !!!