பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் தலை மற்றும் உடல்கள் இரு கூறாகப் பிளக்கப்பட்டு மிதந்த சடலம் அப்பகுதியில் உள்ளோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சின்ராஜ் கூழ குமார் ஆகிய இருவரும் சில மாதங்களுக்கு முன்பு நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது ஒன்றாகவே அனைத்து செயல்களிலும் ஈடுபடுவது என்று நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கூழ குமார் தனது அண்ணன் வீட்டிற்கு ஒருநாள் சின்ராஜை விருந்துக்கு அழைத்துள்ளார்.
அங்கே உணவு பரிமாறிய அவரது கூழ குமாரின் அண்ணியிடம் சாமர்த்தியமாக பேசி சின்ராஜ் செல்போன் நம்பரை வாங்கியுள்ளார். இதையடுத்து அவரிடம் தொடர்ச்சியாக பேசி காதல் வலையில் விழ வைத்து அவ்வபோது வீட்டில் ஆண்கள் இல்லாத சமயத்தில் சென்று அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த விஷயம் கூழ குமாரின் அண்ணன் வீட்டுக்கு தெரிய வீட்டில் விரிசல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அண்ணன் மனைவியும் பிரிந்து செல்ல குடும்பமே மன உளைச்சலுக்கு ஆளாகியது. இதனால் ஆத்திரம் அடைந்த கூழ குமார் சின்ராஜ் மீது கோபம் கொண்டு கடந்த 20 நாட்களாக தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து அவரை பழிவாங்க மது அருந்த செல்லலாம் என்று கூறி கூட்டிக் கொண்டு சென்று சமயபுரம் அருகில் மது அருந்தி உள்ளனர்.
போதை தலைக்கேறிய நிலையில் கத்தியை எடுத்து சின்ராஜ் மார்பில் குத்தி கொலை செய்துள்ளார் கூழ குமார். ஆத்திரம் தீராத பட்சத்தால் தலையை துண்டாக எடுத்து உடலை இரண்டாக பிளந்து ஆற்றில் மீன்களுக்கு இரையாக்க நரபலி கொடுத்து வீசியுள்ளார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு உதாரணமாக துரோகம் செய்த நண்பனை கொடூரமாக நரபலி கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது கூழ குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.