தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. முதலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த காரணத்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமணம் உள்ளிட்ட சுப காரிய நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் என்றும் எச்சரித்துள்ளது.