Categories
சினிமா

நடிகர் விஜய் பரபரப்பு முடிவு…. விமர்சனங்களை நீக்கக் கோரி மேல்முறையீடு….!!!!

தமிழ் திரைப்பட நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு வாங்கிய சொகுசு காருக்கான நுழைவு வரி தடைக் கோரிய வழக்கில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை என காட்டமாக தீர்ப்பளித்துள்ளார். தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தார்.

மேலும் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, அதனை இரண்டு வாரங்களுக்குள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்குமாறு உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது நடிகர் விஜய் தரப்பில் ஒரு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ரோல்ஸ்ராய்ஸ் கார் விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் ஆட்சேபகரமான கருத்து தெரிவித்துள்ளதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Categories

Tech |