Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த ஈரல் மிளகு வறுவல்!!!

ஈரல் மிளகு வறுவல்

தேவையான  பொருட்கள் :

ஈரல் –  500 கிராம்

சின்ன வெங்காயம் – 200 கிராம்

பச்சைமிளகாய் – 4

மிளகுத்தூள் – 4 டேபிள்ஸ்பூன்

சீரகத்தூள் –   2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் –   2  டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது – 4  டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

Liver pepper roast க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஆட்டு ஈரலை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு  கடாயில்   எண்ணெய் ஊற்றி ,சின்ன வெங்காயம், கறிவேப்பிலை,  பச்சைமிளகாய், மஞ்சள்தூள், உப்பு, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டு ஈரல் சேர்த்து வதக்கி, தண்ணீர்  தெளித்து மூடி போட்டு வேக வைக்கவும். ஈரல்  வெந்தவுடன், சீரகத்தூள், மிளகுத்தூள் , கறிவேப்பிலை தூவி இறக்கிப் பரிமாறவும்.

Categories

Tech |