இந்திய புகைப்பட செய்தியாளர் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தாலிபான்களின் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவிலுள்ள மும்பை மாநிலத்தைச் சேர்ந்த டேனிஷ் சித்திக் என்பவர் ராய்டர்ஸ் நிறுவனத்தில் புகைப்பட செய்தியாளராக பணிபுரிந்தார். இவர் கொரோனா காலக் கட்டங்களில் உயிரிழந்தவர்களை கங்கை கரையில் எரிக்கப்படுவதை புகைப்படம் எடுத்து அதன் மூலம் தன்னை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். இவர் ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் தாலிபான்களின் தாக்குதலை குறித்து தகவல் சேகரிக்க அங்கு சென்றுள்ளார்.
இதன் பின்பு தாலிபான்கள் அங்குள்ள இராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் டேனிஷ் சித்திக் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் இவர் 2018ல் புல்லிட்சர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.