இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இதையடுத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பரிசோதனைகள் செய்யப்படாமல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டால்அது பேரழிவுக்கு வழிவகுக்கும் என டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் அதற்கான கொள்கைகள் பகுக்கப்பட்டு நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் செலுத்தப்படும் என கூறியுள்ளது.