Categories
மாநில செய்திகள்

மனைகளை பத்திரப்பதிவு செய்தால் இனி செல்லாது…. பதிவுத்துறை ஐஜி அதிரடி உத்தரவு….!!!

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப் பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப்பதிவு செய்யவும், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தடை விதித்தது. இதை எதிர்த்து மனை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சார் பதிவாளர் அலுவலகங்களில் அங்கீகாரம் இல்லாத மனை சட்டவிரோதமாக பதிவு செய்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கீகாரம் இல்லாத மனைகள் பத்திர பதிவு செய்தால் அது செல்லாது என பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். எனவே ஆவணத்தாருக்கு உரிமை மாற்றம் ஏற்படாத ஆவணத்தை வீணாக பதிவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |