Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால கட்ட முடியல… வியாபாரி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நிகிலேசன் பகுதியில் ரங்கநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி பகுதியில் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரங்கநாதன் தொழில் ரீதியாக கடன் வாங்கியுள்ளார். ஆனால் ரங்கநாதனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாமல்மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் ரங்கநாதனுக்கு கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி கடைக்குச் சென்று அவரிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு ரங்கநாதன் இன்னும் சிறிது காலம் கழித்து தங்களுடைய பணத்தை கொடுக்கிறேன் என்று கூறியபோது அதனை அவர்கள் ஏற்காமல் எங்களுக்கு உடனடியாக பணம் வேண்டும் இல்லையென்றால் வீட்டிற்கு சென்று தகராறு செய்வோம் என்று கூறியுள்ளனர். இதனால் ரங்கநாதன் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் ரங்கநாதர் வழக்கம்போல் கடைக்கு சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இதை பார்த்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரங்கநாதனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |