உதகை அருகே மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவியைப் பிடித்து இந்து முன்னணி அமைப்பினர் விபூதி பூச வைத்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாம்பே கேஸ் பகுதியில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் பிரசங்கங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் இரண்டு பேரும் அங்கிருக்கும் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக கூறி சுற்றிவளைத்தனர்.
பின்னர் அவர்களிடம் விபூதியை கொடுத்து நெற்றியில் பூச வைத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெந்தகோஸ்து திருச்சபை சார்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மனு அளித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.