வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதாநகர் பகுதியில் ரவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த மாதம் ரவியை கொலை செய்வதற்கு மதன், ஜோதிராஜா, ஜெரீன், சதீஷ் குமார் மற்றும் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் இணைந்து முயற்சி செய்துள்ளனர். இதனால் ரவி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அதன் பிறகு காவல் துறையினர் மதன், ஜோதிராஜா, ஜெரீன், சதீஷ் குமார் ஆகியோரின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலெக்டர் செந்தில்ராஜ் என்பவரிடம் அலெக்ஸ்பாண்டியன் ஜாமினில் வெளியே சென்றால் தொடர்ந்து இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவார் என்பதால் அவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.
அந்தப் பரிந்துரையை ஏற்று கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ் உடனடியாக அலெக்ஸ் பாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் நகலை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சிறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் அலெக்ஸ் பாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.