Categories
மாநில செய்திகள்

BREAKING : தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு எதிராக வழக்கு….!!

தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய்ய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் மனு தாக்கல்  செய்துள்ளார். அதில்,

 தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் , இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்ற கொலீஜிய உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு பட்டியலிடப்பட்ட பிறகு விசாரணை உகந்ததா ? இல்லையா என்று தெரிவிக்கப்படுமென்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |