பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென மாயமானதை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா சைபீரியா கெட்ரோவ் நகரில் இருந்து ‘ஏஎன்-28′ என்ற விமானம் நேற்று காலை பயணிகளுடன் டாம்ஸ்க் நகருக்கு நகருக்கு சென்றது. இந்த விமானத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட 17 பயணிகளும், மூன்று விமானிகளும் பயணம் செய்தனர். இதனிடையே சென்று கொண்டிருந்த விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரம் முன்பு கட்டுபாட்டின் துறையின் தொடர்பை இழந்து காணாமல் போனது.
இதனை தொடர்ந்து காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் தொடங்கியது. ரஷியாவின் அவசரகால அமைச்சகம் காணாமல் போன சிறிது நேரத்தில் விமானம் கண்டறியப்பட்டது என்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக விமானம் தரையிறங்கியது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் விமானத்தில் இருந்த குழந்தைகள் உட்பட 17 பேருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.