Categories
சினிமா தமிழ் சினிமா

வெப் சீரிஸில் களமிறங்கிய நயன்தாரா… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

பாகுபலி வெப் சீரிஸில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .

சமீபகாலமாகவே வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இதுவரை காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா போன்ற பல முன்னணி நடிகைகள் வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவும் வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார் .

அதன்படி மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ள பாகுபலி வெப் சீரிஸில் நயன்தாரா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அதில் வருகிற செப்டம்பர் மாதம் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடிகை நயன்தாரா நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் .

Categories

Tech |