Categories
உலக செய்திகள்

அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள்…. தகவல் தெரிவித்த நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்…!!

அதிக அளவிலான தடுப்பூசிகளை மக்கள் செலுத்தியுள்ளதாக அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.

உலக அளவில் கொரோனா தொற்றால் அதிக அளவிலான பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கையில்  ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து அமெரிக்கா நாட்டு மக்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களான மாடர்னா, பைசர், பயோஎன்டேக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்றவைகள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.

இதுவரை அமெரிக்காவில் 33,66,04,558  தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து கடந்த ஜூலை 15ஆம் தேதி வெளியான செய்தியின் படி 33,60,54,953 தடுப்பூசிகள் மொத்தமாக போடப்பட்டுள்ளது. மேலும் 18,54, 24,599 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 16,06,86,378 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |