ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் கூறியுள்ளார்.
சவுதி அரேபிய எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலை அடுத்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வேறு நாடுகளை நாட வேண்டிய நிலை வந்துள்ளது என்றார். இதற்காக ரஷ்யாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பாக தலைமைச் செயல அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் ரஷ்ய ரோஸ்டர் தலைமை செயலக அதிகாரி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்,
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மாற்று இடங்களை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளதை சுட்டிக் காட்டி அவர் இந்தியாவிற்கு எண்ணை ஏற்றுமதி செய்ய ரஷ்ய எண்ணெய் நிறுவனம் நடவடிக்கை எடுக்க உள்ளது என்றார். இந்தியாவிலேயே கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க ரஷ்யா முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.