கோவையில் மெடிக்கலில் வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்ததால் அதிர்ச்சி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் இரும்பு கரும்புக்கடை பகுதியையைச் சேர்ந்தவர் இன்று காலை பல் வலி, மற்றும் பல்வீக்கம் இருப்பதாக தெரிவித்து கரும்பு கடையில் பகுதியில் உள்ள முக்கிய சந்திப்பில் இருக்கக்கூடிய ஒரு மருத்து கடையில் வலி நிவாரண மாத்திரை வாங்கி வந்துள்ளார். அப்போது அந்த மாத்திரையை வீட்டுக்குச் சென்று பிரித்து பார்த்தபோது அந்த மாத்திரையில் கம்பி இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
பின்னர் இது குறித்து மாத்திரை வாங்கிய கடையில் விசாரித்துள்ளார். அந்த பல்வலிக்காக வாங்கப்பட்ட இந்த மாதிரியானது ரக்ஷன் என்ற கம்பெனியில் இருந்து தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த தனியார் நிறுவனத்திடமிருந்து தயார் செய்யப்பட்டு இங்கு விற்பனைக்காக இருந்திருக்கிறது. இது குறித்து சுகாதாரத்துறையிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.