உற்பத்தியாளர்களிடம் பால்களை கொள்முதல் செய்யாததினால் அவர்கள் அலுவலகம் முன்பாக கேன்களை வரிசையாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாகம்தீர்த்தபுரம் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் 100-க்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். இந்நிலையில் இதில் தேவைக்கு அதிகமாக பால் கொள்முதல் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஊழியர்களுக்கு பணிச்சுமை காரணத்தினால் கூட்டுறவு சங்கத்துக்கு மாதத்திற்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
இதனால் குறிப்பிட்ட இரண்டு நாட்கள் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பாலை கொள்முதல் செய்ய முடியாததால் அவர்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். அதன் பின் வழக்கம்போல் உற்பத்தியாளர்கள் கேன்களில் பால் எடுத்து வந்த நிலையில் கூட்டுறவு சங்கம் மூடப்பட்டிருந்ததினால் கோபம் அடைந்த உற்பத்தியாளர்கள் பால் கேன்களுடன் சங்கு அலுவலகத்தின் முன்பாக வரிசையாக அதை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள
பின்னர் கூட்டுறவு சங்கத்தின் மேற்பார்வையாளரை வர கூறி பின் பால்களை கொள்முதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் கூறும் போது தேவைக்கு அதிகமாக பால் வரத்து இருந்த காரணத்தினால் 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை விட வேண்டிய சூழ்நிலை இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனால் விடுமுறைகள் விடப்பட்ட நாள் அன்றும் தங்களிடம் இருக்கும் பாலை கொள்முதல் செய்ய வேறு வழி ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தங்களின் பாலை கொள்முதல் செய்ய வேண்டி கூட்டுறவு சங்கத்தில் முன்பாக உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தியதினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது.