Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதை அவங்களுக்கு கொடுத்தாச்சி….நரிக்குறவர்களுக்கு செய்த பேருதவி…. நடைப்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி….!!

நரிக்குறவர்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வன்னிமேடு பகுதியில் நரிக்குறவர்களுக்கு ரேஷன் கார்டு மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சியரான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்துள்ளார்.

இதனையடுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணிநூல் துறை அமைச்சரான ஆர்.காந்தி,எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் நரிக்குறவர்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் ரேஷன் கார்டுகளை வழங்கியுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அசோகன் மற்றும் ஆதிதிராவிடர் நலக்ழு அமைப்பாளர் சக்திவேல்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Categories

Tech |