இயக்குனர் டீகே இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருங்காப்பியம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் டீகே. தற்போது இவர் கருங்காப்பியம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா கஸன்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகை நொய்ரிகா புதுமுக கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
@deekaydirector @MsKajalAggarwal @ReginaCassandra @jananihere @aadhavkk @KalaiActor @iYogiBabu @paVeEnterntainm1 @APIfilms @aditi1231 @proyuvraaj pic.twitter.com/suEtG1h5wh
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) July 16, 2021
மேலும் யோகிபாபு, கலையரசன், கருணாகரன், ஜான் விஜய், விஜே பார்வதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . இந்நிலையில் கருங்காப்பியம் படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.