பேரிகார்டுகள் சரியாக இயங்காததால் வாகன ஓட்டிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடியை சீக்கிரமாக கடந்து செல்வதற்கு கடந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து பாஸ்டேக் முறை அமலுக்கு வந்தது. எனவே ஊரடங்கு காலங்களில் அதிக அளவில் வாகனங்கள் செல்லாததால் கடந்த 9 மாதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஆனி மாதம் நிறைவு பெறுவதால் பல்வேறு கிராமங்களில் சுப விசேஷங்களுக்கு செல்வதற்காக அதிக வாகனங்கள் பள்ளி பள்ளிகொண்டா சுங்கச் சாவடியை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது சுங்கச்சாவடியில் உள்ள தானியங்கி பேரிகார்டுகள் சரியாக செயல்படாததால் வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக நின்றது.
இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்க முயற்சி செய்தனர். அப்போது பாஸ்டேக் முறையை கொண்டு வந்த பிறகும் அரை மணி நேரத்திற்கு மேல் வாகனங்களை நிறுத்தி வைத்தது குறித்து வாகன ஓட்டிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சுங்கச்சாவடி மேலாளரிடம் கேட்டபோது, பாஸ்டேக் வழிகளில் உள்ள பேரிகார்டுகள் சரியாக செயல்படாததால் அதை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகனங்கள் அதிக நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சரிசெய்த பின் மீண்டும் வாகனங்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்து வருவதாக மேலாளர் தெரிவித்துள்ளார்.